ஒருநாள் நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் தொழுது கொண்டி ருந்தேன். அப்போது தொழுகையாளிகளில் ஒருவர் தும்மினார். உடனே நான் 'யர்ஹமுக் கல்லாஹ்' (இறைவன் உங்களுக்கு அருள்புரி வானாக!) என்று மறுமொழி கூறினேன்.
உடனே தொழுகையில் இருந்தோர் என்னை முறைத்துப் பார்த்தனர். 'நீங்கள் ஏன், என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்' என்று கேட்டேன். அவர்கள் பதிலேதும் கூறாமல் தங்கள் கைகளால் தொடைகளில் தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச்சொல்கிறார்கள் என்று உணர்ந்து அமைதியாகி விட்டேன்.
என் தாயும் தந்தையும் நபியவர்களுக்கு அர்ப்பணம்! 'அவர்களுக்கு முன்னரோ பின்னரோ, அவர்களைவிட மிக இனியமுறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை, நான் என் வாழ்நாளில் கண்டதேயில்லை.' இறைவன் மீதாணை யாக! தொழுகையில் நான் அவ்வாறு நடந்து கொண்டதற்காக, அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை.
மாறாக, நபியவர்கள் தொழுது முடித்ததும், 'தோழரே! தொழுகையானது, மனிதப் பேச்சுகளுக் குரிய நேரமல்ல; இடமல்ல. மாறாக, இறைவனைத் துதிப்பதும் அவனைப் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதும்தான்' என்று சொன்னார்கள்.
'இறைத்தூதர் அவர்களே! நான் அறியாமைக் காலத்திற்கு நெருக்கமானவன். இறைவன் இஸ்லாத்தைத் தழுவும்பேற்றை தற்போதுதான் அருளினான். எனவேதான் எனக்கது தெரியவில்லை' என்று கூறிவிட்டு,
🌸 'எங்களில் சிலர் சோதிடர்களிடம் செல்கிறார்
களே' என்றேன். அதற்கு நபியவர்கள் 'சோதிடர் களிடம் நீங்கள் செல்லாதீர்கள்' என்றார்கள்.
🌸 'எங்களில் இன்னும் சிலர் பறவையை வைத்துக் குறிபார்க்கின்றனரே' என்றேன். அதற்கு அவர்கள், 'இது, மக்களின் உள்ளங்களில் உள்ள (மூடத்தன மான) ஐதீகம். இது உங்களை செயல்படுவதி லிருந்து தடுத்திட வேண்டாம்' என்றார்கள்.
🌸 'எங்களில் இன்னும் சிலர் நற்குறி அறிய மணலில் கோடு வரையும் பழங்கால கணிப்பு முறையை மேற்கொள்கின்றனரே' என்றேன். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர்களில் ஒருவர் இவ்வாறு கோடு வரைந்து வந்தார். யார் அவரைப் போன்று கோடு வரைகிறாரோ அது சாத்தியம்தான்' என்றார்கள்.
🌸 'என்னிடம் ஓர் அடிமைப்பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை மேய்த்துக் கொண்டி ருந்தபோது, ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடு களில் ஒன்றைக் கவ்விச் சென்றுவிட்டது. சராசரி மனிதன் கோபப்படுவதைப் போல நானும் கோபப்பட்டு அவளை அறைந்துவிட்டேன்'.
நான் நபியவர்களிடம் சென்றபோது, அது குறித்து அவர்கள் என்னைக் கடுமையாகக் கண்டித்தார்
கள். 'இறைத்தூதர் அவர்களே! அவளை நான் விடுதலை செய்துவிடட்டுமா' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்து வாருங்கள்' என்று சொன்னார்கள்.
நான் அவளை அழைத்துச் சென்றேன். அவளிடம், 'இறைவன் எங்கே இருக்கின்றான்' என்று அவர்கள் கேட்டார்கள். அவள், 'வானத்தில்' என்று பதிலளித்தாள். அடுத்து தம்மைக் குறித்து, 'நான் யார்' என்று கேட்டார்கள். அவள், 'நீங்கள் இறைவனின் தூதர்' என்றாள்.
🌸 நபியவர்கள் என்னிடம், 'அவளை விடுதலை செய்துவிடுங்கள்! ஏனெனில், அவள் ஒரு இறைநம்பிக்கையுள்ள பெண்' என்றார்கள்.
[முஆவியா பின் அல்ஹகமிஸ் ஸுலமீ (ரளி)
ஸஹீஹ் முஸ்லிம் - 935]

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக