யா அல்லாஹ்!
நபி மூஸாவை காக்க கடலை பிளந்தவனே!
தொட்டிலில் குழந்தையாக இருந்த ஈஸா நபியை பேச வைத்தவனே!
மீனின் வயிற்றில் இருந்த யூனுஸ் நபியை உன் சக்தியால் காப்பற்றியவனே!
கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அய்யூப் நபியை உன் கருணையினால் குணப்படுத்தியவனே!
என் இரட்சகனே!
மகத்தான உன்னுடைய பெயரால் கேட்கிறேன்!
துக்கம், கவலை, நெருக்கடி, வியாதி, இவை அனைத்தையும் விட்டு என்னை காப்பாற்றுவாயாக!
நான் துக்கத்தில் ஆழ்ந்தால் என்னை மகிழ்ச்சியுடையவனாக ஆக்குவாயாக!
எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் உன்னை அல்லாமல் மற்றவரிடம் என்னை தள்ளி விடாதே!
நிச்சயமாக நீ என்னால் தாங்க முடியாத கஷ்டத்தை கொடுக்க மாட்டாய்!
என்னை படைத்தவனே!
என் வாழ்கையை உனது கரத்தில் வைத்திருப்பவனே!
என்னுடைய நற்பாக்கியமும், துர்பாக்கியமும் உன் கையிலே இருக்கின்றன!
ஏக இறைவா! என்னுடைய உள்ளத்தை மகிழ்ச்சி உடையதாக ஆக்குவாயாக!
இவ்வுலகமே எனக்கு ஒன்று சேர்ந்து நன்மை செய்ய நாடினாலும் எனக்கென்று நீ எழுதி வைத்ததை தவிர எந்த நன்மையையும் எனக்கு கிடைக்காது என்று நான் ஈமான் கொண்டுள்ளேன்
உலகமெல்லாம் ஓன்று சேர்ந்து எனக்கு துன்பம் இழைக்க முயற்சித்தாலும் எனக்கு எதிராக நீ எழுதிய துன்பம் மட்டுமே என்னை அடையும் என்பதை நான் நம்புகிறேன்!
ஏக இறைவா! என் உள்ளத்தில்நிறைய தேவைகள் இருக்கின்றன!
உன்னையல்லால் வேறு யாரிடமும் அதை சொல்ல முடியாது. என்னுடைய ரகசியங்களும் என் ஆழ் மனதில் புதைந்து உள்ளவை களையும் நீ மட்டுமே அறிவாய்!
“குன்” ஆகுக என்று சொன்னால் அனைத்தும் ஆகிவிடும் என்று சொன்னவனே!
என்னுடைய விருப்பங்களை நோக்கி (குன்) “ஆகிவிடு” என்று சொல்வாயாக!
நீ என்னுடன் இருப்பதால் எனக்கு யாரிடமும் எந்த தேவையும் இல்லை.
எனக்கு நீ வழி காட்டு. என்னுடைய காரியங்களை நீ திட்டமிட்டு நிறைவேற்று.
நான் தவறான வழியில் செல்லும் போது என்னை நேரான வழியில் திருப்பிவிடு.
வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கு கட்டுப்பட்டவனாக வாழ்ந்து மரணிக்கின்ற பொழுதும் உனக்கு கட்டுப்பட்டவனாக மரணிக்கின்ற பாக்கியத்தை தந்தருள்வாயாக!
யா அல்லாஹ் . . . . .
எங்கள் பாவங்களை மன்னித்து
விடு
யா அல்லாஹ் . . . .
நாங்கள் செய்த தவறுகளை
மன்னித்து விடு
யா அல்லாஹ் . . .
கப்ருடைய வேதனையிலிருந்து
நரக நெருப்பிலிருந்தும்
எங்களை பாதுகாப்பாயாக
யா அல்லாஹ்
இம்மையிலும்
மறுமையிலும்
வெற்றியை
தருவாயாக..........
ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்; யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாக பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்..இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா? என கேட்டார்.அதற்கு அல்லாஹு தஆலா ; மூஸாவே! இறுதி காலப்பகுதியில் நான் முஹம்மத் (ஸல்) இன் கூட்டத்தினரை அனுப்புவேன்.அவர்கள் காய்ந்த உதடுகளுடனும்; வரண்ட நாவுடனும், மெலிந்து கண்கள் குழிவிழுந்த தோற்றத்துடனும் இருப்பதோடு; வயிற்றில் பசியுடன் -என்னை அழைப்பர்(துஆ மூலம்).அவர்கள் தான் அதிகம் அதிகம் எனக்கு நெருக்கமானவர்கள். மூஸாவே! உங்களுக்கும் எனக்கும் மத்தியில் 70000 தடுப்புக்கள் இருந்தன. ..ஆயினும் இஃப்தார் நேரத்தில் எந்த ஒரு தடுப்பும் எனக்கும் நபி முஹம்மதின் உம்மத்திற்கும் இருக்காது.மூஸாவே! இஃப்தார் நேரத்தில் நோன்பாளியின் துஆ நிராகரிக்கப்படாது .அதற்கான பொருப்பை நானே ஏற்கிறேன்.என்றான்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக