கண்மணி முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு ஹபீபுல்லாஹ் இறைவனின் நண்பர் என்று ஒரு பெயர் உண்டு .
இவர்கள் என்னுடைய நண்பர் என்று அல்லாஹ் ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை. அல்லாஹ் முஹம்மத் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை எப்படி நேசித்தான் என்பதற்கு சில உதாரணங்கள்.
1.அபுலஹப் நாயகத்தை திட்டிய போது அல்லாஹ் அபீலஹபை சபிக்கிறான் .
2.ஒரு யூதன் ஆன் வாரிசு இல்லாதவர் என்று நபிய்யுல்லாஹ் அவர்களை பார்த்து கூறியபோது அந்த யூதனை அல்லாஹ் சபிக்கிறான்
3.நபிகளுக்கு முன்னாள் உங்கள் குரலை உயர்த்த வேண்டாம் என்று கூறி நபியை கண்ணியப்படுத்துகிறான் .
4.பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுத நேரத்தில் கஹ்பத்துல்லாவை கிப்லாவா ஆக்கினால் நன்றாக இருக்குமே என எண்ணி நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் நினைத்த போது கஹ்பதுல்லாஹ்வை நோக்கி தொழ உத்தரவு பிறப்பிக்கிறான்
5. நபியுடைய மனைவி மார்கள் சில பிரச்சனைகள் செய்த போது நபிக்காக பரிந்து பேசுகிறான் .
6.குர்ஆன் மறந்து விடுமோ என்ற எண்ணத்தில் வேக வேகமாக ஓதிய போது உங்கள் மனதில் நாம் பதிய வைப்போம் நீங்கள் சிரமப்படாதீர்கள் என்று கூறி சிரமத்தை குறைக்கிறான்
7. மக்கள் இந்த மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும்போது நபிகளின் கவலையை பார்த்த அல்லாஹ் இந்த மக்களின் மீது கவலை கொண்டு உங்களை நீங்களே அழித்துக்கொள்வீர்கள் போலிருக்கிறது என கூறி கவலையை நீக்குகிறான்.
8.குர் ஆனிலே மற்ற நபிமார்களின் பெயரை நேரடியாக அழைத்த அல்லாஹ் நபிகளின் பெயரை மட்டும் நேரடியாக அழைக்காமல் யாஸீன் ,தாஹா என்றும் முஹம்மத் என்ற பெயரை கூறினாலும் அதோடு ரசூலுல்லாஹ் என்ற பெயரையும் இணைத்தே அழைத்து அழகு பார்க்கிறான் .
9.நபியே உம புகழை நாம் உயர்த்துவோம் என்று கூறுகிறான் .
10.நபிய்யுல்லாஹ் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் மீது நானும் வானவர்களும் சலவாத் சொல்கிறோம் நீங்களும் சலவாத் சொல்லுங்கள் என கட்டளையிடுகிறான்(சல்லல்லாஹு அலைஹி வசல்லம் )
11.f ப அவ்ஹா இலா அப்திஹி மா அவ்ஹா என்று கூறி ரகசியம் பேசுகிறான்
12.ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு அண்ணலாரை திருமணம் செய்து வைக்கிறான் .
இவை அனைத்தையும் விட "நபியே நீங்கள் கூறுங்கள் ...
அல்லாஹ் உங்களை(மனிதர்களை ) நேசிக்க வேண்டுமென்றால்
என்னை(நபியவர்களை ) பின்பற்றுங்கள்
அல்லாஹ் உங்களை(மனிதர்களை ) நேசிப்பான் என கூறுங்கள் " என்று கூறி இம்மை மறுமை அனைத்தும் அண்ணலாரை நேசிப்பதிலும் பின் பற்றுவதிலே இருக்கிறது என்று கூறி நம்முடைய வெற்றி தோல்வி அனைத்தும் அண்ணலம்பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை பின் பற்றுவதிலே இருக்கிறது என்று நமக்கு கடிவாளத்தை போடுகிறான் .
அல்லாஹும்ம ஸல்லி அலா சையிதினா முஹம்மதிவ்(சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) வ அலா ஆலி முஹம்மதிவ்(சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) வபாரிக் வ சல்லிம் அலைஹி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக