செவ்வாய், 9 மே, 2017

திருமணமாகப்போகும் தன் மகளுக்கு ஒரு

🌺🌹 திருமணமாகப்போகும் தன் மகளுக்கு ஒரு
தந்தையின் அறிவுரை 🌹🌺
❣❣ வழக்கமாக மணப்பெண்ணிற்கு அம்மா மட்டும்
தானே அறிவுரை கூறுவார்கள், பின் ஏன் புதிதாய்
உன் அப்பா உனக்கு அறிவுரை கூறுகிறேன்
என்று உனக்கு வியப்பாக
இருக்கிறதா? செல்லமே!
❣❣ அப்பாவும் மனம் திறந்து உன்னிடம் சில
விஷயங்களை கூற விரும்புகிறேன், உன்
எதிர்கால மணவாழ்க்கையில்
ஏதோ ஒரு தருணத்தில் உபயோகமாக
இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்..
❣❣ 1.என் அப்பாவின் நேர்மை, என் அப்பாவின்
திறம்பட முடிவெடுக்கும் திறன், என் அப்பா…
என அடுக்கடுக்காக நீ உன் அப்பாவிற்கு சூட்டும் கிரிடமும் , என் அப்பாதான் ‘பெஸ்ட்’ என்ற
எண்ணமும் உன் மனதின் ஆழத்தில் மட்டுமே வைத்துக்கொள்.
வார்த்தைகளில் வெளிப்படுத்தி ‘உன்னவரின்’
மனதில் எரிச்சலை உண்டு பண்ண வேண்டிய
அவசியம் இல்லை. உன் கணவரிடம்,
“என் அப்பா நேரம் தவற மாட்டார்”,” என் அப்பா அதிகாலையில் உடற்பயிற்சி செய்வார்” என்று
அப்பா புராணம் பாடாதே கண்ணம்மா….
உன் அப்பாவும் ஒரு காலத்தில் காலை 8 மணி
வரை தூங்கிய சோம்பேரி தான்.
❣❣ 2. உன் பிடிவாதங்களை எல்லாம் கோபத்துடன் கையாளாமல் அப்பா பொறுத்துக்கொண்டது போல்,
உன் கணவரும் சகித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்காதே.
என் வயதிற்கே உரிய பொறுமை மற்றும் உன்
மீதான கண்மூடித்தனமான பாசமும் என்
கோபங்களை மறைத்திருக்கலாம்.
அவரும் உன் பிடிவாதங்களுக்கு பின்னிருக்கும் குழந்தைதனத்தை புரிந்துக் கொள்ள அவகாசம்
கொடு.
முக்கியமாக உன் பிடிவாதங்களை தளர்த்தி,
அப்பாவிற்கு பெருமை சேர்க்கப்பார்.
❣❣ 3.சிறு சிறு வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடு
உங்கள் இருவருக்குள்ளும் வர தான் செய்யும். அச்சமயங்களில் எல்லாம், “நான் என் அப்பா
வீட்டிற்கு போகிறேன் “,”எனக்கு என் அப்பா
இருக்கிறார் ” என்ற வசனங்களை பேசி உன்
மேல் அவருக்கு கசப்பு வர வைத்து விடாதே...
முடிவுகள் எடுக்கும்போது வழமை போல
அப்பாவிடம் கேட்டுசொல்றன் என்று வாய்தவறிக்கூட கூறிவிடாதே... இனிமேல் நீங்கள் இருவரும்தான் எதிலும் முடிவு எடுக்கனும்...
உன் கணவர் தான் இனி உன் உலகம் என்பதை
அவருக்கு புரிய வை. நீ அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், மரியாதையும் அவர் மனதில் உன்னை சிம்மாசனம் போட்டு உட்கார
வைக்கும்.
ஆண்களின் கோபம் கூட ஒரு விதத்தில்
அன்புதான்... அதனால் நீயும் திருப்பி
கோபப்படாதே....
உன் அம்மாவின் சகிப்புத்தன்மை தான் என்னை
பல இடங்களில் மனிதனாக மாற்றியது...
அதேபோல் நீயும் சகிப்புத்தன்மையை வளர்க்கவேண்டும்.
சுருக்கமாக கூற வேண்டுமானால்….
*அப்பா புராணம் பாடாதே.
*அப்பாவோடு ஒப்பிடாதே .
*அப்பா செல்லம் ‘ என்ற பட்டம் பயன் தராது .
*அப்பாக்கு கொடுத்த கிரிடத்தை அவருக்கும் கொடு.
22 வருடங்கள் உன் கரம் பிடித்து நான் கற்றுக்கொடுத்த நற்பண்புகளை,இனி மேல் உன் கணவரின்
கரம்கோர்த்து வெற்றியும் மகிழ்ச்சியும்
நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்துக்
காட்டுவதில் நிரூபித்துக் காட்டு.
நீடுடி வாழ வாழ்த்துகள்❣❣. . .💐💐💐
✫✫ JJ ✫✫
(⁀‵⁀) ✫ ✫ ✫.
`⋎´✫¸.•°”˜˜”°•✫
..✫¸.•°”˜˜”°•.✫
☻/ღ˚ •。 ★★★
/▌*˛˚ღ •˚ ★✰✰ ☆ தெவிட்டாத துளிகள் ★ ✰✰★
/ \˚** ★★★

விழிப்புணர்வு செய்தி

🌍 விழிப்புணர்வு செய்தி
♈சார்ஜ் போட்டபடி பேசியதால்,போன்  வெடித்து சிறுவனின் கண்கள் பாதிக்கப்பட்டன.
♈சார்ஜ் போட்டபடி பேசியதால், போன்  வெடித்து இளைஞர் உயிரிழப்பு
♈இரவில் சார்ஜ் போட்ட போன் வெடித்து குடிசை தீப்பிடித்து இருவர் பலி
♈இது போல் நாம் அடிக்கடி பல செய்திகளை பார்த்திருப்போம்.
♈ஆனால் நாம் முறையாக செல்போன் பற்றிய தகவல்கள்  தெரியாதால் தான் இது போல் சம்பவங்கள் தற்போது அடிக்கடி
நடக்கின்றன.
♈சமீப காலங்களாக மொபைல் போன் வெடித்து சிதறுவது வாடிக்கையாக அரங்கேறி வருகின்றது.
♈உலகம் முழுவதும் பலரது மொபைல் போன்கள் அடிக்கடி வெடிக்கின்றது,
♈சில இடங்களில் போன் வெடித்து பலருக்கும்  அதிகளவு காயங்கள் ஏற்படுகின்றன.
♈மொபைல் போன்கள் வெடிக்காமல் இருக்க நாம்  என்ன செய்ய வேண்டும்
⛔மொபைல் போன் வெடித்து சிதறாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் :
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
1⃣எப்பொழுதும் ஒரிஜினல் பேட்டரிக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
2⃣மொபைல் போன் சார்ஜரும் ஒரிஜினலாக தான் இருக்க வேண்டும்,
3⃣போலி  சார்ஜர்கள் போனிற்கு அதிகளவில் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் இதனால் சில நேரங்களில் போன் வெடிக்கும்.
4⃣மொபைல் போன், பேட்டரி மற்றும் சார்ஜர் என அனைத்தும் ஒரே நிறுவனத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும்.
5⃣போன் சார்ஜரில் இருக்கும் போது அழைப்புகளை மேற்கொள்ள கூடாது.
6⃣ போன் ஈரமாக இருக்கும் போது உடனடியாக சார்ஜ் செய்ய கூடாது
7⃣பேட்டரி சேதமடைந்தால் உடனடியாக அதனை மாற்ற வேண்டும்.
8⃣போன் பேட்டரி சார்ஜ் செய்து முடித்த பின் உடனடியாக போனினை சார்ஜரில் இருந்து எடுத்து விட வேண்டும்.
9⃣பேட்டரி அதிகளவு சூடாக அனுமதிக்காதீர்கள்
🔟சார்ஜ் போட்டப்படி கேம் விளையாடுவது, படம் பார்ப்பது போன்றவைகள் செய்யாதீர்கள்.
1⃣1⃣ஈரக்கையுடன் மொபைல் போன் உபயோகிக்காதீர்கள்
1⃣2⃣கழிவறை மற்றும் குளியல் அறைகளில் மொபைல் போன் பயன்படுத்தாதீர்கள்.
1⃣3⃣மொபைல் போன் சார்ஜ்ஜில் இருக்கும் போது தலையணை க்கு கீழே வைக்க கூடாது ஏனெனில் சூடு அதிகமாக வாய்ப்பு உள்ளது.
1⃣4⃣மழைகாலத்தில் வெளியே செல்லும் போது
செல்போன் ஈரம் ஆகாமல் பார்த்து கொள்ளுங்கள்.
1⃣5⃣சார்ஜ் போட்டு கேம் விளையாட யாரும் முயற்சிக்க கூடாது அப்படி செய்தால் விபரீதம் ஏற்படும் என்று நமக்கு தெரிந்தும் தொடர்ந்து  பலர் இதுபோன்ற தவறுகளை செய்வதால் விபத்து ஏற்படுகிறது.
1⃣6⃣ சிறுவர்களை முடிந்தவரை சார்ஜ் ஏறும்போது போனை எடுக்க அனுமதிக்க  வேண்டாம் என நாம் சொல்லி வைக்கவேண்டும்.
1⃣7⃣  செல்போன் ஈரம் ஆகிவிட்டால் உடனடியாக கடையில் கொடுத்து சரி செய்து விடுங்கள்.
👆🏼மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை சரியாக பின்பற்றுங்கள்.
📱அதிகமாக போன்கள் வெடித்து சிதற காரணமாக இருப்பது நீங்கள் விலைகம்மியாக இருக்கு என்று வாங்கும் போலியான தரமற்ற சாதனங்கள் தான்,
📲எனவே விலைகுறைவாக
உள்ளதே என்று கண்ட பொருட்களை வாங்கி உங்கள் உயிரோடும் உங்கள் குடும்பத்தினரின் உயிரோடும் விலையாடாதீர்கள் விலை குறைவான போலியான பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

எச்சரிக்கப் படுகிறது.

ஒரு பெண்  தன் சமையல்
அறையில் கியாஸ் (Gas stove ) அடுப்பில்
சமையல் செய்து கொண்டு
இருக்கும் போது பக்கத்தில்
பாத்திரம் கழுவும் இடத்தில் சில
கரப்பான் பூச்சிகளைக் கண்டாள்.
.உடனே அவள் பூச்சிக் கொல்லி ("Hit",
"Mortein" )மருந்தை அடித்து தெளித்தாள்.அந்த
மருந்தின் வேகத்தால் கியாஸ் சிலிண்டர்
வெடித்து அவள் மேல் 65% தீக்காயம்
ஏற்பட்டது.
அவளைக் காப்பாற்ற முயன்ற கணவர்
மீதும் தீக்காயம் ஏற்பட்டது.இருவரும்
மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.
கணவர் தொடர்ந்து சிகிச்சை
பெற்று வருகிறார். ஆனால் அந்த
பெண்  சிகிச்சை
பலனின்றி பரிதாபமாக இறந்து போனாள்.அவள்
இறந்தது கூட கணவனுக்கு
தெரியாது.
அதனால் எரிவாயு எரிந்து
கொண்டு இருக்கும் போது
பூச்சிக் கொல்லி மருந்துகளை
தெளிக்க வேண்டாம் என்று
எச்சரிக்கப் படுகிறது.

அது ஒரு பழ மரம்

அது ஒரு பழ மரம். ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர் பாத்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான் .அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.
அதற்கு அவன் சொன்னான். என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, கடையில் வாங்கலாம் என்றாலும் கையில் காசில்லை என்றான்.
மரம் சொன்னது கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று அதில் பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்று சொன்னது... அவனும் மகிழ்ச்சியுடன் மரத்தில் ஏறி பழங்களை பறித்து சென்றான்.
மறுபடியும் அவன் பல நாள் வரவில்லை. வாரங்கள், மாதங்கள் ஓடின அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து அவன் ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது.
அதற்கு அவன் சொன்னான், இல்லை எனக்கு இப்பொது வயதாகி விட்டது, எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர், ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை என்றான்.  மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் அதில் ஒரு வீடு கட்டிக்கொள் என்றது.
அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். அப்போது மரம் அவனிடம் இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து என்னை பார்த்து செல் என்றது. அவனும் வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் அவன் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. அதற்கு பின் பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.
மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது. அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. அவன் சொன்னான் என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான்.
மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது. அவன் அடி மரத்தை வெட்டும் போது மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது.
ஆனால் பல வருடங்கள் அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான். அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.
இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை கிளைகள் இல்லை அடி மரமும் இல்லை உனக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே என வருந்தியது.
அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்.
அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.
இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும் அது தான். அதை கூடவா நம்மால் தர முடியாது??????????.    -----  படித்ததில் பிடித்தது -

imo உபயோகிப்போர் கவனத்திற்கு.......


தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் அதனால் ஏற்படும் நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் சில தீய செயல்களும் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன....
அந்த வரிசையில் உள்ள ஒன்று தான் imo இதன் மூலம் நாம் ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செய்ய முடியும்....
இதில் என்ன ஆபத்து உள்ளது என்றால் நாம் நம்முடைய சொந்த உறவினர்களுடன் பேசுவதற்கே இது போன்ற அப்ளிகேசன்களை பயன்படுத்துகின்றோம் ஆனால் நம்முடைய நம்பர் யாரிடம் உள்ளதோ அவர்களுக்கும் நாம் imo வில் உள்ளோம் என்பதை தெளிவாக காட்டிவிடும்...
உதாரணமாக நாம் சவாரிக்கு உபயோகிக்கும் ஆட்டோ டிரைவர்களின் நம்பர்களை நம் குடும்ப பெண்கள் மொபைல் ஃபோனில் save செய்து வைத்திருந்தால் நம்முடைய தகவல்கள் அனைத்தும் எதிர் தரப்பில் உள்ள நபருக்கு தெரியும் அதாவது நாம் imo உபயோகிக்கின்றோம் என்பதை தெளிவாக அவர்களுக்கு காட்டிவிடும் இதன் மூலம் சில தவறான நபர்கள் இதை தவறான முறைக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் .....
எப்படி என்றால் நமது வீட்டில் உள்ள குழந்தைகள் கையில் மொபைல் ஃபோன்களை கொடுப்பது என்பது இப்போது சர்வ சாதாரணமாக உள்ளது.....
குழந்தைகள் தெரியாமல் imo open செய்து அதில் உள்ள ஃபோன் சிம்பலை தவறுதலாக இலேசாக கையை வைத்தாலே போதும் உடனே கால் சென்றுவிடும் இது எதிர்தரப்பில் உள்ளவருக்கு தெரியாது குழந்தை தான் தவறாக கால் செய்துவிட்டது என்று மீண்டும் அதே நம்பருக்கு இந்த நபர் கால் செய்ய முயற்ச்சிக்க பிரச்சனை இங்கு தான் தொடங்குகின்றது ....
எனவே உங்கள்வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் ஃபோன்களில் தேவையற்ற நம்பர்களை save செய்ய வேண்டாம் என வழியுறுத்துங்கள்....
சவாரிக்கு எடுக்கும் ஆட்டோ,கார் டிரைவர்களின் நம்பர்களை வீட்டில் உள்ள ஆண்களின் மொபைல் ஃபோனில் மட்டும் save செய்து கொள்ளுங்கள்.....
சைத்தான் எவர் மூலமாகவும் வழிகெடுப்பான் எனவே பெண்கள் தங்கள் மொபைலில் உள்ள தேவையில்லாத நம்பர்களை உடனே அழித்துவிடுங்கள்......
இன்னொரு விஷயம் imo வில் invite friends என்ற ஒரு option உள்ளது இதன் மூலம் imo வில் இல்லாத சில நபர்களை நாம் மெசேஜ் மூலம் imo விற்கு அழைப்பதே இதன் பொருள் விவரம் தெரியாத சிலர் இதனை தவறுதலாக உபயோகிக்கின்றனர் invite friends சென்று select all கொடுத்தால் போதும் நமது மொபைலில் உள்ள அனைத்து நம்பருக்கும் அதாவது அவர் Nokia 1100 உபயோகித்தாலும் சரி அவருக்கும் நம்முடைய invite msg சென்று விடும் இதற்கு imo ஒன்றும் Free option ஒன்றும் கொடுக்கவில்லை நாம் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜ்க்கும் நமது இருப்பு தொகையிலிருந்தே
(BALANCE)இருந்தே பணம் வசூலிக்கப்படும்
விவரம் தெரியாத சிலர் இதனை தவறாக உபயோகித்து தனது மொபைலில் உள்ள அனைத்து பேலன்சையும் இழப்பதை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம் எனவே இந்த விஷயத்தை ஆண் பெண் இருபாலரும் கவனமாக கையாள வேண்டும் என்பதே நமது கோரிக்கை...
அன்புடன்....
ஹாபிழ், முஹம்மத் ரபீக், மிஸ்பாஹி.

ஏப்ரல் ஃபூல்

❌❌ஏப்ரல் ஃபூல்❌❌
ஏப்ரல் மாதம் துவங்கியவுடன் முஸ்லிம்களில் சிலர் பிறரை மதிக்காமல்,
 உரிய கவுரவத்தைக் கொடுக்காமல்,
 அவர்களிடம் பொய் சொல்லி,
அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது,
 ஏளனமாகச் சிரிப்பது,
 மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்.
 இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் - முட்டாளாக்கி அற்ப சந்தோஷத்தை அனுபவிப்பதை பார்க்கிறோம்.
எனவே நாம், நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும், நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும்.
அபூபக்ரா (ரலி) கூறியதாவது: "பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். "ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்'' என்று நபித் தோழர்கள் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் தான்'' என்று கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து, "அறிந்து கொள்ளுங்கள். பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்). பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்)'' என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள்.
(நூல்: புகாரி 5976, முஸ்லிம் 126)
இன்னும் சிலர் உண்மையுடன் பொய்யும் புரட்டும் சேர்த்துப் பேசுவார்கள். இதற்குப் பெயர் ஏமாற்றுதல், மோசடி ஆகும். உதாரணமாக ஏப்ரல் மாதத்தில் ஏமாற்றுவதற்காக, விபத்து நடந்து விட்டது என்றோ, இன்னார் அபாயகரமான (சீரியஸான) நிலையில் இருக்கிறார் என்றோ, மரணித்து விட்டார் என்றோ தொலைபேசி அல்லது தந்தி மூலமாகத் தகவல் அனுப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஏமாற்றுகின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல.
(நூல்கள்: முஸ்லிம் 147, திர்மிதீ 1236)
"மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக் கொடி ஒன்று நட்டப்படும். இது இன்னாரின் மகன் இன்னாரின் மோசடி' என்று கூறப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி 6178)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் ஒரு அடையாளக் கொடி உண்டு. அது மறுமையில் அவனது புட்டத்திடம் நட்டப்படும்.
(நூல்: முஸ்லிம் 3271)
ஆகவே ஏப்ரல் 1 முட்டாள் தினம் என்பது இஸ்லாத்தில் கிடையாது!!
அதிகம் பகிரவும்

புதன், 3 மே, 2017

தங்கத்திற்குரிய ஜகாத்

தங்கத்திற்குரிய ஜகாத்
எண்பத்தியேழரை கிராம்
தங்கத்திற்கு – 2 கிராம் 187.5
மி.கி.
11 பவுனுக்கு 2 கிராம் 250
மி.கிராம்
12 பவுனுக்கு 2 கிராம் 400 மி.
கிராம்
13 பவுனுக்கு 2 கிராம் 600 மி.
கிராம்
14 பவுனுக்கு 2 கிராம் 800 மி.
கிராம்
15 பவுனுக்கு 3 கிராம்
16 பவுனுக்கு 3 கிராம் 200 மி.
கிராம்
17 பவுனுக்கு 3 கிராம் 400 மி.
கிராம்
18 பவுனுக்கு 3 கிராம் 600 மி.
கிராம்
19 பவுனுக்கு 3 கிராம் 800 மி.
கிராம்
20 பவுனுக்கு 4 கிராம்
25 பவுனுக்கு 5 கிராம்
30 பவுனுக்கு 6 கிராம்
35 பவுனுக்கு 7 கிராம்
40 பவுனுக்கு 1 பவுன்
50 பவுனுக்கு ஒன்னேகால்
பவுன்
60 பவுனுக்கு ஒன்றரை பவுன்
70 பவுனுக்கு ஒன்னே
முக்கால் பவுன்
80 பவுனுக்கு இரண்டு பவுன்
90 பவுனுக்கு இரண்டேகால்
பவுன்
100 பவுனுக்கு இரண்டரை பவுன்

📔ஜகாத் விபரம்📔
🔹Rupees. 👉Rs.          Ps.
🔹100.        👉 2.           50
🔹200         👉5.            00
🔹300         👉7.            50
🔹400.        👉 10.         00
🔹500.        👉12.          50
🔹600.        👉15.          00
🔹700.        👉17.          50
🔹800.        👉20.          00
🔹900.        👉22.          50
🔹1000.      👉25.          00ந்
🔹1500.      👉37.          50
🔹2000.      👉50.          00
🔹2500.      👉62.          50
🔹3000.      👉75.          00
🔹3500.      👉87.          50
🔹4000.      👉100.        00
🔹4500.      👉112.        50
🔹5000.      👉125.        00
🔹5500.      👉137.        50
🔹6000.      👉150.        00
🔹6500.      👉162.       50
🔹7000.    👉175.        00
🔹7500.       👉187.       50
🔹8000.       👉200.       00
🔹8500.       👉212.       50
🔹9000.       👉225.       00
🔹9500.       👉237.       50
🔹10000.     👉250.      00
🔹15000.     👉375.      00
🔹20000.     👉500.      00
🔹25000.     👉625.      00
🔹30000.     👉750.      00
🔹35000.     👉875.      00
🔹40000.     👉1000.    00
🔹45000.     👉1125.    00
🔹50000.     👉1250.    00
🔹55000.     👉1375.    00
🔹60000.     👉1500.    00
🔹65000.     👉1625.    00
🔹70000.     👉1750.    00
🔹80000.     👉2000.    00
🔹90000.     👉2250.    00
🔹1 lakh.      👉2500.    00
🔹2 lakh.      👉5000.    00
🔹3 lakh.      👉7500.    00
🔹4 lakh.      👉10000.  00
🔹5 lakh.      👉12500.  00
🔹6 lakh.      👉15000.  00
🔹7 lakh.      👉17500.  00
🔹8 lakh.      👉20000.  00
🔹9 lakh.      👉22500.  00
?
?10 lakh.    👉25000. 00
🔹20 lakh.    👉50000. 00
🔹30 lakh.    👉75000. 00
🔹40 lakh.    👉1 lakh.
🔹50 lakh.    👉1 lakh 25000
🔹1 crow.     👉2 lakh 50000
🔹2 crow.     👉5 lakh.